Matriculation School-ல் இரண்டாவது வகுப்பு படிக்கும் குழந்தை “மாமா, நாளைக்கு எங்க Miss, Fourth Table சொல்லச் சொல்லியிருக்காங்க. சொல்லித் தர்ரீங்களா?”
ஆவலுடன் நான் “அதற்கென்ன, சொல்லிக்கொடுத்தால் போச்சு!” என்று
“ஒரு நான்கு நான்கு”
“இரு நான்கு எட்டு” என்றேன்.
“ஐய்ய்யோ! என்ன மாமா சொல்றிங்க”
“Fourth Table”
“இப்படி சொல்லக்கூடாது, Four Ones are Four,
Four Twos are Eight”
“நீ சொல்வது ‘English’ நான் தமிழில் சொல்லித்தர்ரேன்”
“வேண்டாம் மாமா! தமிழ்ல சொன்னா எங்க Miss அடிப்பாங்க!”
ஓடி விட்டது குழந்தை!
வேதனையுடன் தமிழனாகிய நான்.
கல்லூரியில் படிக்கும் மாணவன் என்னிடம்,
“அண்ணே! நான் Tamil Medium-ல் படிச்சதால எனக்கு English வாசிக்கத் தெரியலைண்ணே! நீங்கெல்லாம் எப்படிண்ணே Tamil Medium-ல் படிச்சிட்டு English வாசிக்கிறீங்க”
“தமிழில் 247 எழுத்துக்களையும் அறிந்துகொண்டு பொருள் தருமாறு வார்த்தைகள் எழுதிப் படிக்க தெரிந்த நம்மால் English- ல் இருக்கிற 26 எழுத்துக்க்ளையும் easy- யா எழுதிப் படிக்க முடியும். எங்கே தமிழில் உள்ள மெய்யெழுத்துக்களைச் சொல்லு பார்ப்போம்”
“ க ங . . .”
“இது உயிர்மெய்யெழுத்து”
“ஆங்க்…. ‘க ச ட த ப ற’ ”
“நான் கேட்பது மெய்யெழுத்துக்களை? நீ சொல்வது வல்லினம்”
“நீங்க ஒருவாட்டி சொல்லுங்கண்ணே”
“க் ங் ச் . . . .”
“ஓ! க் ங் ச் ட் ன் ர்… ஐயோ! தெரியலையேண்ணே!”
வேதனையுடன் தமிழனாகிய நான்
__________________________________________________________________________________
Bank Exam coaching centre-ல் ஆங்கில பேராசிரியர் ஒருவர்,
“நம்ம Government தமிழ்லதான் leave letter எழுதனும்னு சொல்லிருச்சு. இன்னும் Half day leave-க்கு சின்ன ‘ர’ போடுவதா, பெரிய ‘ற’ போடுவதான்னு குழப்பமா இருக்கு!”
அனைவரும் சிரித்தார்கள்.
வேதனையுடன் தமிழனாகிய நான்.
Mora Technologies அலுவலகத்தில் சக ஊழியர் ஒருவர் என்னிடம்,
“ராஜா! உங்க Number சொல்லுங்க”
“தொண்ணூற்று ஏழு, தொள்ளாயிரத்து பதினான்கு..”
“97 9014 – சரியா?”
வேதனையுடன் தமிழனாகிய நான்.
குறிப்பு 1 : இப்பதிவை படிப்பவர்கள் தமிழ் மெய் எழுத்துக்களை பிழை இல்லாமல் உச்சரித்துப் பாருங்கள். பிழையில்லாமல் உச்சரித்தவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
குறிப்பு 2 : இப்பதிவு தொடர்பான உங்கள் கருதுக்களையும், அனுபவங்களையும் கருத்துப் பெட்டியில் பகிருங்கள். நன்றி.
athe...vethaniyudan naanum.. vaalththukkal
ReplyDeleteநன்றி மதுரை சரவணன்
ReplyDeleteஹை... சிங்கம் களம் இறங்கிடுச்சி... ராஜா.. ராஜா.. ராஜா..
ReplyDeleteவணக்கம் சகோ உங்கள் வேதனை நியாயமானது .
ReplyDeleteஇப்பெல்லாம் ஆங்கிலத்தின்மீது உள்ள மோகத்தால்
இந்தமாதிரித் தவறுகள் அதிகம் நிகழ்கிறது.இது ஒரு
வேதனைக்குரிய விடயம் .இதை முதலில் பெற்றோர்கள்தான்
உணரவேண்டும்.பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்.
சௌந்தருக்கு நன்றி! நன்றி! நன்றி!சௌந்தருக்கு நன்றி! நன்றி! நன்றி!
ReplyDeleteவருகை தந்து வாழ்த்திய சகோ விற்கு நன்றி!
ReplyDeleteunga aruvaiku alave illaiyaunga aruvaiku alave illaiya
ReplyDeleteஉங்க வேதன நியாமானதுதான்
ReplyDeleteவணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இன்று தான் வருகிறேன். உங்கள் பதிவு அருமை. இன்னும் நிறைய எழுதுங்கள். நான் மனிதர்களைப் பற்றி வேறு விதமாக என் தளத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி நண்பரே!
ReplyDeleteநம்ம தளத்தில்:
"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"
ஒவ்வொருவரும் அவர் அவர் வீட்டில் மாற்றங்களைக் கொண்டு வந்தால் அது நாடு முழுதும் எதிரொலிக்கும். உங்கள் தமிழ் பற்று மேலும் ஓங்குக...
ReplyDeleteஅங்கிலத்தை அடக்குவது மிகப் பெரிய சவாலாக உள்ளது நண்பரே...
ReplyDeleteவேதனையுடன் தமிழனாகிய நான். சிந்திக்கவைக்கும் சிறப்பான தமிழ் பகிர்வுகள்.
ReplyDelete